ஒவ்வொரு முறையும் உங்கள் பயணம் பாதுகாப்பாய் அமைய எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை.

நாம், நம்முடைய ஒவ்வொரு பயணத்தின் போதும், கடவுளிடம் கேட்டுப்பெறும் வகைக்கு, கட்டாயம் முன்னெடுக்க வேண்டிய மந்திரம் குறித்து பார்ப்போம்.

நமது வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ளும் முன்னெடுப்பில் பயணம் முதன்மைத்துவமானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெறுமனே நடையாக மட்டுமல்லாமல், நாம் உருவாக்கிக் கொண்ட அதிவேக கருவிகளில் அமர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் பாதுகாப்பாக அமைய, கட்டாயம், அந்தப் பயணப் பாதுகாப்பிற்கு ஒரு மந்திரத்தைக் காப்பாகக் கட்டி ஓதிடத் தேவையுள்ளது.

உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில், கடவுளால் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றித்தரும் வகைக்கு உங்களுக்கான வெற்றியைச் சாத்தியம் ஆக்கித்தரும் கடவுள்.

பாதுகாப்பான பயணத்திற்கான நினைப்பில், நம்மிடம் கடவுள் கேட்கும் முதன்மை கேட்பே, சாலை விதிகள் ஆகும். அதில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையின் எந்தத் தளத்திலும் இல்லாத போட்டி பயணத்தில் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

பயணத்தில் பாதுகாப்பு கேள்விக் குறியாவதற்கு அடிப்படை காரணமே நமது கமிட்மெண்ட் என்கிற காலக்கட்டாயமேயாகும். நாளைக் காலை எட்டு மணிக்கெல்லாம் பயணத்தை முடித்துக் கொண்டு, வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்கிற காலக்கட்டாயத்தை- பயணநேரத்திற்கு நெருக்கடி கொடுத்து, வேகத்தையும் ஓய்வின்மையையும் கூடுதல் ஆக்கிக் கொள்கிறோம்.

அத்தை வீட்டில் தாமதமாகிவிட்டது. அம்மன் கோயிலில் தாமதமாகி விட்டது, போக்கு வரத்து நெரிசலில் தாமதமாகி விட்டது. ஆனால் நமக்கு உபரியாக இருக்கிற ஒரே நேரம் ஓய்வுக்கான நேரம் அல்லது உறக்கத்திற்கான நேரம் மட்டுமே. அந்த ஓய்வின்மையும் அல்லது உறக்கமின்மையும் பயணத்தில் பாதுகாப்பு கேள்விக் குறியாவதற்கு காரணியாகி விடுகிறது.

குழந்தை பசியில் அடம் பிடிக்கிறது. அந்த அடம்பிடித்தல், நமக்குக் கடவுளால் வழங்கப்படும் பாதுகாப்பின் எச்சரிக்கை நோக்கம், என்கிற அடிப்படையைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

அதே பாதுகாப்பின் எச்சரிக்கை நோக்கில், உங்கள் மகன், செல்பேசியை அல்லது மின்னேற்றியை அத்தை வீட்டிலேயே வைத்துவிட்டதாக கொஞ்ச தூரம் வந்ததும் தெரிவிக்கிறான்.

அதே பாதுகாப்பின் எச்சரிக்கை நோக்கில், உங்கள் இருசக்கர துள்ளுவண்டியை சாவிபோடாமலே நீண்ட நேரம் முயற்சிக்கின்றீர்கள்.

அதே பாதுகாப்பின் எச்சரிக்கை நோக்கில், வரும் வழியில் உங்கள் குழந்தை கரும்புச்சாறு கேட்டு அடம் பிடிக்கிறது. இப்படி வந்த நிறைய எச்சரிக்கைகளை புறக்கணித்ததைப் பயணத்தில் நிகழ்ந்த பெரிய கேள்விக்குறிக்குப் பின்பே அலசி அலசி அங்கலாய்க்கிறோம். தயவுகூர்ந்து பயணத்தின் போது உங்களுக்கு வருகிற சிறு சிறு எச்சரிக்கையும் கடவுளால் தரப்படுவது என்று புரிந்து கொண்டு, அந்த எச்சரிக்கைகளுக்கு கட்டாயம் மதிப்பளியுங்கள்.

எக்காரணம் பற்றியும் பயணம் முடித்துத் திரும்பும் நேரத்தை மணித்துளிக் கணக்கில் துள்ளியம் காட்டாதீர்கள். சொந்த வண்டியில் இரவுப்பயணத்தை எப்போதும் தவிருங்கள்.

சொந்த வண்டியில் இரவுப்பயணம் மேற்கொள்ளும் போது, வண்டியோட்டும் உறவோடு பொழுதுபோக்காக பேச்சுக் கொடுத்துக் கொண்டே வாருங்கள். வண்டியோட்டும் உறவின் இணைஇருக்கையில் தூங்கிக் கொண்டு வருகிறவர்களை ஒருபோதும் அமர்த்தாதீர்கள்.

அடுத்து- பயணத்தில்நாம் கட்டவேண்டிய மந்திரத்திற்கு வருவோம்.

பயண மந்திரத்தில்- கடவுளிடம் அதாவது விசும்பு தெய்வத்திடம், உங்கள் குலதெய்வத்தையும் முன்னிலைப்படுத்தி நேரடியாக அருள்செய்க என வேண்டுவது சிறப்பு ஆகும்.

கடவுளே! 

விசும்பு தெய்வமே!

குலதெய்வமே!

எனக்கும், 

வண்டியை இயக்கும் என் உறவுக்கும்

உடன் பயணிக்கும் உறவுகளுக்கும் 

பயண உதவி வண்டிக்கும் 

பாதுகாப்பாய் வர வேண்டும்.

கடவுளே! 

விசும்பு தெய்வமே! 

குலதெய்வமே! 

அருள்செய்க. 

என்று இரண்டு முறை ஓதி உங்கள் பயணத்திற்கு மந்திரக்காப்பு கட்டுங்கள். பயணம் நூறுவிழுக்காடும் பாதுகாப்பாய் அமையும்.

 மேலே சொன்ன காப்புக்கட்டில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்ல வேண்டும். வண்டியை இயக்கும் உறவின் பெயரையும் சொல்ல வேண்டும். உடன் பயணிக்கும் உறவுகள் நண்பர்கள் அனைவரின் பெயரையும் சொல்ல வேண்டும். 

ஒவ்வொரு முறையும் உங்கள் பயணம் பாதுகாப்பாய் அமைய எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தப் பயண மந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அத்தனை செய்திகளுக்கும், ஏன்? எதற்கு? எப்படி? என்கிற தெளிவான விளக்கங்களும் கற்றுத் தரப்படுகிறது, மந்திரம் கோயில் முன்னெடுக்கும் மந்திரம் சான்றிதழ் படிப்பில்.

மந்திரம் கோயில் முன்னெடுக்கும் மந்திரம் சான்றிதழ் படிப்பில் இணைய விரும்பினால் இணைப்பில் சென்று, முழுமையாகப் புரிந்து கொண்டு சான்றிதழ் படிப்பில் இணையலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

தமிழறிவு மற்றும் அறிவுத்திறன் போட்டி- 10