சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்
இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம். தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரின் பெயர்களோடு, சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம். கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம், தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் பேசினால்- நம் வாழ்க்கை இயக்கத்தில் நம்மோடு இணைந்து, நம்மை வளர்த்துக் கொண்டே இருக்கிற ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, என்கிற நான்கு ஆகும். அந்த நான்கையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள, நாம் கேட்ட வகைக்கு கொடுத்திருக்க, நம்மை முயக்கும் ஐந்தாவது ஆற்றல் விசும்பு என்கிற கடவுள் ஆகும். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிற அந்த ஐந்திர ஆற்றலும் நமக்குக் கிடைத்து நாம் பேரளவாகத் தொடர்ந்து வளர்ந்திட உருவாக்கப்பட்டது காப்பு மந்திரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக